Sunday, December 4, 2011

  • ஓம் ஆதிநாதர் திருவடிகள் போற்றி
  • ஓம் அநாதிநாதர் திருவடிகள் போற்றி
  • ஓம் சத்தியநாதர் திருவடிகள் போற்றி
  • ஓம் சகோதநாதர் திருவடிகள் போற்றி
  • ஓம் வகுளிநாதர் திருவடிகள் போற்றி
  • ஓம் மதங்கநாதர் திருவடிகள் போற்றி
  • ஓம் மச்சந்திரநாதர் திருவடிகள் போற்றி
  • ஓம் கடேந்திரநாதர் திருவடிகள் போற்றி
  • ஓம் கோரக்கநாதர் திருவடிகள் போற்றி
  • ஓம் நந்தீசர் திருவடிகள் போற்றி
  • ஓம் திருமூலர் திருவடிகள் போற்றி
  • ஓம் அகஸ்தியர் திருவடிகள் போற்றி
  • ஓம் புலஸ்தியர் திருவடிகள் போற்றி
  • ஓம் போகர் திருவடிகள் போற்றி
  • ஓம் கொங்கணர் திருவடிகள் போற்றி
  • ஓம் கருவூரார் திருவடிகள் போற்றி
  • ஓம் காலங்கிநாதர் திருவடிகள் போற்றி
  • ஓம் இடைக்காடர் திருவடிகள் போற்றி
  • ஓம் பத்திரகிரியார் திருவடிகள் போற்றி
  • ஓம் சிவவாக்கியார் திருவடிகள் போற்றி
  • ஓம் இராம@தவர் திருவடிகள் போற்றி
  • ஓம் கமலமுனி திருவடிகள் போற்றி
  • ஓம் சுந்தரனாந்தர் திருவடிகள் போற்றி
  • ஓம் பூர்ணாநந்தர் திருவடிகள் போற்றி
  • ஓம் ரோமரிஷி திருவடிகள் போற்றி
  • ஓம் திருவள்ளுவர் திருவடிகள் போற்றி
  • ஓம் காகபுஜண்டர் திருவடிகள் போற்றி
  • ஓம் ஔவையார் திருவடிகள் போற்றி
  • ஓம் தன்வந்திரி திருவடிகள் போற்றி
  • ஓம் வால்மீகர் திருவடிகள் போற்றி
  • ஓம் புண்ணாக்கீசர் திருவடிகள் போற்றி
  • ஓம் பூனைக்கண்ணனார் திருவடிகள் போற்றி
  • ஓம் அழுகண்ணிச் சித்தர் திருவடிகள் போற்றி
  • ஓம் அகப்@பய் சித்தர் திருவடிகள் போற்றி
  • ஓம் தேரையர் திருவடிகள் போற்றி
  • ஓம் குதம்பைச் சித்தர் திருவடிகள் போற்றி
  • ஓம் சட்டைமுனி திருவடிகள் போற்றி
  • ஓம் பாம்பாட்டிச் சித்தர் திருவடிகள் போற்றி
  • ஓம் பட்டினத்தார் திருவடிகள் போற்றி
  • ஓம் பதஞ்சலியார் திருவடிகள் போற்றி
  • ஓம் நாரதர் திருவடிகள் போற்றி
  • ஓம் விஸ்வாமித்திரர் திருவடிகள் போற்றி
  • ஓம் காரைச்சித்தர் திருவடிகள் போற்றி
  • ஓம் நாகார்ஜுனர் திருவடிகள் போற்றி
  • ஓம் வாகியார் திருவடிகள் போற்றி
  • ஓம் திருமாளிகைத் @தவர் திருவடிகள் போற்றி
  • ஓம் குமாரத்@தவர் திருவடிகள் போற்றி
  • ஓம் அருணகிரிநாதர் திருவடிகள் போற்றி
  • ஓம் தாயுமானவர் திருவடிகள் போற்றி
  • ஓம் வள்ளலார் திருவடிகள் போற்றி
  • ஓம் முத்துத்தாண்டவர் திருவடிகள் போற்றி
  • ஓம் காரைக்கால் அம்மையார் திருவடிகள் போற்றி
  • ஓம் பராசரர் திருவடிகள் போற்றி
  • ஓம் ஹனுமான் திருவடிகள் போற்றி
  • ஓம் புலிப்பாணி சித்தர் திருவடிகள் போற்றி
  • ஓம் கல்லுளி சித்தர் திருவடிகள் போற்றி
  • ஓம் கணநாதர் திருவடிகள் போற்றி
  • ஓம் குமரகுருபரர் திருவடிகள் போற்றி
  • ஓம் திருதட்சியாமூர்த்தி திருவடிகள் போற்றி
  • ஓம் கௌசிகர் திருவடிகள் போற்றி
  • ஓம் சண்டி@கசர் திருவடிகள் போற்றி
  • ஓம் சுகப்பிரம்மர் திருவடிகள் போற்றி
  • ஓம் டமரானந்தர் திருவடிகள் போற்றி
  • ஓம் தாயுமானவர் திருவடிகள் போற்றி
  • ஓம் கபிலர் திருவடிகள் போற்றி
  • ஓம் அல்லமாபிரபு திருவடிகள் போற்றி
  • ஓம் காசிபர் திருவடிகள் போற்றி
  • ஓம் கவுபால சித்தர் திருவடிகள் போற்றி
  • ஓம் குருராஜர் திருவடிகள் போற்றி
  • ஓம் கௌதமர் திருவடிகள் போற்றி
  • ஓம் சங்கர மகரிஷி திருவடிகள் போற்றி
  • ஓம் சுந்தரமூர்த்தி திருவடிகள் போற்றி
  • ஓம் சூரியானாந்தர் திருவடிகள் போற்றி
  • ஓம் öŒõரூபானந்தர் திருவடிகள் போற்றி
  • ஓம் ஜம்பு மகரிஷி திருவடிகள் போற்றி
  • ஓம் ஜனகர் திருவடிகள் போற்றி
  • ஓம் ஜெகன்நாதர் திருவடிகள் போற்றி
  • ஓம் ஞானசித்தர் திருவடிகள் போற்றி
  • ஓம் திருநாவுக்கரசர் திருவடிகள் போற்றி
  • ஓம் திருஞானசம்பந்தர் திருவடிகள் போற்றி
  • ஓம் துர்வாச முனிவர் திருவடிகள் போற்றி
  • ஓம் நந்தனார் திருவடிகள் போற்றி
  • ஓம் பரத்வாசர் திருவடிகள் போற்றி
  • ஓம் பரமானந்தர் திருவடிகள் போற்றி
  • ஓம் பிங்கள முனிவர் திருவடிகள் போற்றி
  • ஓம் பிருகு முனிவர் திருவடிகள் போற்றி
  • ஓம் பீர்முஹம்மது திருவடிகள் போற்றி
  • ஓம் புலத்தீசர் திருவடிகள் போற்றி
  • ஓம் மச்Œமுனி திருவடிகள் போற்றி
  • ஓம் மாணிக்கவாசகர் திருவடிகள் போற்றி
  • ஓம் மார்க்கண்டேயர் திருவடிகள் போற்றி
  • ஓம் முத்தானந்தர் திருவடிகள் போற்றி
  • ஓம் மெய்கண்ட@தவர் திருவடிகள் போற்றி
  • ஓம் மௌனசித்தர் திருவடிகள் போற்றி
  • ஓம் யோக்கோபு சித்தர் திருவடிகள் போற்றி
  • ஓம் வரரிஷி திருவடிகள் போற்றி
  • ஓம் வியாச முனிவர் திருவடிகள் போற்றி
  • ஓம் விளையாட்டு சித்தர் திருவடிகள் போற்றி
  • ஓம் மிருகண்ட மகரிஷி திருவடிகள் போற்றி
  • ஓம் சீரடிபாபா திருவடிகள் போற்றி
  • ஓம் வசிஷ்ட மகரிஷி திருவடிகள் போற்றி
  • ஓம் யூகி முனிவர் திருவடிகள் போற்றி
  • ஓம் சூலமுனிவர் திருவடிகள் போற்றி
  • ஓம் குகை நமச்சிவாயர் திருவடிகள் போற்றி
  • ஓம் கடைப்பிள்ளை திருவடிகள் போற்றி
  • ஓம் @வதவியாசர் திருவடிகள் போற்றி
  • ஓம் கணபதிதாசர் திருவடிகள் போற்றி
  • ஓம் சட்டநாதர் திருவடிகள் போற்றி

Friday, April 15, 2011


பாம்பாட்டிச் சித்தர் திருக்கோகர்ணத்தில் கார்த்திகை மாதம், மிருகசீரிட நட்சத்திரத்தில் பிறந்துள்ளார். ‘ஜோகி’ என்னும் பிரிவைச் சார்ந்தவர். இவர் பாம்பாட்டிக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றும் கூறுவர்.


இவருக்கு பாம்பைப் பிடிப்பதுதான் தொழில். அதனைப் படம் எடுத்து ஆட வைப்பது மற்றும் அதன் விஷத்தைச் சேகரித்து, அதனை விற்பதே அவருடைய தொழிலாக இருந்துள்ளது. இவர் பல்வேறு வகையான விஷப் பாம்புகளையும் பிடித்து அதனைக் கேட்பவர்களிடம் விற்று வந்துள்ளார்.

இவருடைய தொழிலே விஷப் பாம்புகளைப் பிடிப்பது என்பதாகையால், அதனால் ஏற்படும் விஷத்தைப் போக்குவதற்காக, பாம்புக்கடி, தேள்கடி மற்றும் பல்வேறு வகையான ஜந்துக்களால் ஏற்படும் விஷக்கடியைப் போக்குவதற்காக, விஷமுறிவு மூலிகைகளையும் தெரிந்து வைத்திருந்தார்.

இவர் இருந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் ஏதேனும் விஷக்கடியால் பாதிக்கப்பட்டால், இவரிடம் வந்து வைத்தியம் செய்து கொண்டுள்ளனர். இதனால் இவர் வைத்தியராகவும் இருந்துள்ளார். இதனால் இவருக்கு பல மருத்துவர்களின் தொடர்பும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இவர் தம் குடியிருப்பு பகுதியிலேயே ஒரு வைத்திய ஆராய்ச்சிக் கூடத்தையும் நிறுவி, அங்கு மருத்துவ ஆராய்ச்சியும் செய்து வந்துள்ளதாகத் தெரிகிறது.

நவரத்தினப் பாம்பு:

ஒரு சமயம், அங்கிருந்த வைத்தியர்கள் சிலர், மருதமலைப் பகுதியில் நவரத்தினப் பாம்பு இருப்பதாகவும், அதன் தலையில் பளபளப்பான, பிரகாசம் மிகுந்த மாணிக்கம் இருப்பதாகவும், அதனைக் கொண்டு பல்வேறு சித்து வேலைகள் செய்யலாம் என்றும் கூறினர். மேலும் அந்தப் பாம்பு இரவில்தான் இரை தேடி வெளியில் வரும் என்றும், அதைக் கொண்டு வந்து தந்தால், இவருக்கு சன்மானம் தருவதாகவும் கூறியுள்ளனர். மேலும் அதனைப் பிடிப்பவர்கள் மிகவும் பாக்கியசாலிகளாவார்கள் என்றும் கூறியுள்ளார்கள்.
எனவே பாம்பாட்டியார் அந்தப் பாம்பைப் பிடிப்பதற்காக, மிகவும் ஆர்வமுடன் இரவு பகலாக, காடு மேடுகளையே சுற்றிச் சுற்றி வந்தார். எப்படியும் அந்தப் பாம்பைப் பிடித்து விடுவது என்று மிகவும் தீவிரமாக இருந்தார். ஒரு சிறு பாம்புப் புற்றைப் பார்த்தால் கூட, அதனை இடித்து அதனுள் அந்தப் பாம்பு இருக்கிறதா என்று தீவிரமாகத் தேடத் தொடங்கினார்.

இதன் காரணமாக அந்தப் பகுதியில் பாம்புகளின் நடமாட்டம் குறைந்தது. மேலும் இவரின் தீவிர தேடுதலால், மற்ற பாம்புகளும் தங்களின் வளைக்குள் பதுங்கத் தொடங்கின. இவ்வாறு இருந்த போதிலும், அவருக்கு நவரத்தினப் பாம்பைப் பிடிப்பதில் இருந்த ஆர்வம் சற்றும் குறைந்ததாகத் தெரியவில்லை. அதன் மீதிருந்த ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்தது.

இவ்வாறிருக்கையில், எந்தப் பாம்பையும் பார்க்க முடியவில்லையே என்று அவர் மிகவும் சோர்வாக மருதமலைக் காட்டைச் சுற்றி வந்தபொழுது, ஒருநாள் பாம்பாட்டியார் முன்பு, சூரியனைப் போன்ற பிரகாசத்துடனும், ஒரு பெரிய சிரிப்புடனும் சட்டைமுனிச் சித்தர் நின்றார். அவருடன் பேச விரும்பிய பாம்பாட்டியார், "சுவாமி தாங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்? இங்கு என்ன செய்கிறீர்கள்? தங்களை இதற்கு முன்பு இங்கு பார்க்கவில்லையே?" என்று கேட்டார்.

அதற்கு சட்டைமுனி, "நான் காட்டில் வசிப்பவன். நான் உன்னைப் பார்த்து கேட்க வேண்டிய கேள்வியை நீ என்னைப் பார்த்து கேட்கிறாயா?" என்று சொன்னார்.
அதற்கு பாம்பாட்டியார், "நான் ஒரு பாம்பாட்டி. பாம்புகளைப் பிடிப்பது, அதன் விஷத்தை எடுத்து விற்பது, பின் அதனை ஆட்டுவிப்பதுதான் என்னுடைய தொழில். இக்காட்டில் நவரத்தினப் பாம்பு என்று ஒன்று இருப்பதாகவும், அதனுடைய தலையில் மிகவும் ஒளி பொருந்திய அபூர்வமான மாணிக்கம் ஒன்று இருப்பதாகவும் கேள்விப்பட்டு அதனைப் பிடிக்க வந்தேன்" என்றார்.

உடனே சட்டை முனி, "பிடித்து விட்டாயா?" என்று கேட்டார்.

பாம்பாட்டியார், "இந்தக் காட்டில் பாம்புகளே இல்லையெனும்படியாக ஒரு பாம்பைக் கூடக் காணவில்லை. தற்சமயம் இங்கிருக்கும் பாம்புப் புற்றை உடைக்க இருந்தபோது, தாங்கள் வந்து என் காரியத்தைக் கெடுத்து விட்டீர்கள்" என்று கூறினார்.

சட்டைமுனி, "அப்பா, நீ செய்வதோ பயனற்ற செயல். அவ்வாறிருக்க நான் வந்து எவ்வாறு காரியத்தைக் கெடுத்துவிட முடியும்?" என்று கேட்டார்.

உடனே பாம்பாட்டியார், "நான் செய்வது பயனற்ற செயலா? எவ்வாறாயினும் அந்த நவரத்தினப் பாம்பைப் பிடிக்காமல் விடமாட்டேன்" என்று கூறினார்.

உடனே சட்டைமுனிச் சித்தர், "உன்னிடமே நவரத்தினப் பாம்பை வைத்துக் கொண்டு வெளியில் தேடுகிறாயே? காட்டில் அலைந்து திரியும் பாம்புகளைப் பிடித்து ஆட்டுவிக்கிறேன் என்று சொல்கிறாயே, உன்னிடமுள்ள பாம்பைப் பிடித்து உன்னால் ஆட்டுவிக்க முடியுமா?" என்று கேட்டார்.

அதற்கு பாம்பாட்டியார், "என்ன சுவாமி சொல்கிறீர்கள்? என்னிடமே நவரத்தினப் பாம்பு உள்ளதா? அதனை என்னால் பிடிக்க முடியுமா? பிடித்து ஆட்டி வைக்கவும் முடியுமா? அவ்வாறு ஆட்டி வைக்க முடியுமென்றால், அதனைப் பிடித்து ஆட்டி வைக்கும் முறையை எனக்குக் கற்றுக் கொடுங்கள். இதனை இந்நாள் வரையிலும் எனக்கு யாருமே சொல்லவில்லையே" என்று வருத்தமுடன் கூறினார்.

"உன்னிடமுள்ள நவரத்தினப் பாம்பிற்கு குண்டலினி என்று பெயர். அது ஒவ்வொரு மனிதனிடமும் உள்ளது. அதனை ஆட்டி வைப்பதென்பது அவ்வளவு எளிதான காரியமன்று. அதனை அடக்கி வைக்கத் தெரிந்து விட்டால் அட்டமா சித்துகளையும் அடைந்திடலாம். அதனை ஆட்டுவிக்கத் தெரிந்தவனே ஞானி.

அந்தப் பாம்பானது, கரு வீட்டுக்கும், எரு வீட்டுக்கும் இடையில் சுருண்டு படுத்துள்ளது. அதனை எழுப்புவதென்பது ஒரு கடினமான செயல். நீ உன்னை அறிந்து, உன் புருவ மத்தியின் நடுவில், சிவனின் இருப்பிடத்தில் உன் சித்தத்தை அடக்கி அதனைத் தட்டி எழுப்புவாயாக" என்று சட்டைமுனிச் சித்தர் அருளினார்.

மேலும் அவர், நீ பாம்பைப் பிடித்து ஆட்டுவித்ததினால், முதலிலேயே பாம்பாட்டியார் என அழைக்கப்பட்டாய். இப்போழுதும் குண்டலினி எனும் பாம்பை அடக்கப் போவதால், உன்னை அனைவரும் பாம்பாட்டிச் சித்தர் எனப் போற்றுவர் எனவும் வாழ்த்தி அங்கிருந்து மறைந்தார்.
அது முதல் பாம்பாட்டிச் சித்தர், சட்டைமுனிச் சித்தரை தன்னுடைய குருவாக ஏற்றுக்கொண்டு, அங்கிருந்த ஒரு அரச மரத்தினடியில் அமர்ந்து, தன் சித்தத்தை ஸ்திரமாக்கி, தன்னிடமிருந்த குண்டலினி எனும் பாம்பை எழுப்பி, அட்டமா சித்திகளும் கைவரப் பெற்று, சித்தர்கள் வரிசையில் இடம் பெற்றார்.

அதன்பின், ஆகாய மார்க்கமாக பல நாடுகளுக்கும் சென்று, மக்களுக்கு கடைத்தேறும் மார்க்கங்களைக் காட்டி அருளினார். அவர் மக்களுக்கு பல்வேறு வகையான மருத்துவக் குறிப்புகளையும் பாட்டாக எழுதியுள்ளார். அப்பாடல்கள், "சித்தர் பாடல்கள்" வரிசையில் இடம் பெற்றுள்ளன.

அவர் தம் பாட்டின் முடிவில், "ஆடு பாம்பே" என்று குறிப்பிடுவார். வெளித்தோற்றத்தில் அவர் வெளியில் அலைந்து திரியும் பாம்புகளைப் பற்றிக் குறிப்பிடுவது போலத் தோன்றினாலும், இறுதியில் உட்பொருளாக அவருடைய ஒவ்வொரு பாடலும், நம் உடலுக்குள் சூட்சுமமாக இருக்கும் குண்டலினி எனும் பாம்பைக் குறிப்பிடுவதையே காணலாம். அவரின் ஒவ்வொரு பாடலும் ஆழ்ந்த உட்பொருளை உடையதாகவே உள்ளது.
இவ்வாறு அவர் பல்வேறு அதிசயங்களை நிகழ்த்திக் காட்டினார். அவர் பல்வேறு மக்களுக்கு அருளையும், கர்ம வினைகளால் வாடியவர்களுக்கு இரசவாதம் எனும் இரும்பைத் தங்கமாக்குதல் மூலமாகவும், சாதாரணக் கற்களை நவரத்தினங்களாக மாற்றியும் அவர்தம் வறுமைநிலை நீக்கியும் உள்ளார்.

அவர் பல்வேறு வகையான மருத்துவ நூல்கள், பிற நூல்களை இயற்றியுள்ளதாகவும் தெரிகிறது.

பாம்பாட்டிச் சித்தர் இறுதியாக "மருத மலை"யிலும், சங்கரன் கோயிலுக்கருகே உள்ள "பாம்புக் கோயில்" என்ற இடத்திலும் சமாதியானதாகக் கூறுவர். சித்தர்கள் பலமுறை, பல அவதாரங்கள் எடுத்து, பலப்பல இடங்களில் அவர்கள் விரும்பும் வகையில் சமாதியாகும் தன்மை படைத்தவர்கள். போகர், திருமூலர் ஆகியோர் 2, 3 இடங்களில் சமாதி நிலையை அடைந்ததாகக் கூறுவர்.

போகர் ஏழாயிரம் - 21 - 30 பாடல்கள்


  1. வாசியோகம்
    நாட்டமாய் லகுவாக மூலம்பாரு நலமான வாசிகொண்டு ஊதியூதி
    ஊட்டமாய் சாக்கிரத்தில் நின்றுநின்று உத்தமனே நந்திகண்டால் வாதங்காணும்
    தூட்டமாய் வெறும்பேச்சால் வார்த்தைசொன்னால் சுடுகாட்டுப்பிணமாக
    சொல்லுக்கொக்கும்
    பூட்டுவாய் மூலத்தின் ஒளிகாண்மட்டும் பொற்கொடிபோல் சுழிமுனையும் திறந்துபோகும்

  2. சுழிமுனையே திறந்தாக்கால் மனமொடுங்கும் சுழியிலே அகப்பட்ட துரும்புபோலாம்
    வழிமுனையே ஆதாரம் ஏறலாகும் மகத்தான சித்தியது எட்டுவாகும்
    சுழிமுனையாஞ் சுழித்துள்ளே அழித்திடாது கணக்கோடே வாசியென்ற குதிரையேறு
    சுழிமுனையில் இருந்தாக்கால் அங்கொன்றுமில்லை

  3. ஏறவே ஐம்புலனும் உலக்கையாக விடும்பான ஆங்காரம் உரலுமாக
    ஆறவே ஆசையது உருவமாக வழுப்பான மனதை உள்ளெகாட்டிக்கொண்டு
    மூறவே ஆசையதை அடித்துத்தள்ளி முழுமோசமாகியல்லோ பிரலப்பண்ணும்
    தேறவே யோகம்முதல் ஞானம்ரெண்டும் தெரியாதே இறந்தவர்கள் கோடிதானே

  4. கோடியென்ற நரஜென்மம் மண்ணாசையாலும் குணமான ஆசையுட தீனியாலும்
    ஓடியென்ற மோகத்தில் பெண்ணாசையாலும் மோகத்தால் பூட்டுகின்ற பொன்னாசையாலும்
    தூடியென்ற சுகபோக சுகியினாலும் துலையாத பாகத்தின் மயக்கத்தாலும்
    வாடியிந்த உலகமெலாம் மயக்கமாச்சு மக்களே வாய்ஞானம் பேச்சுமாச்சே

  5. ஆச்சென்ற பேச்சாலே ஒன்றுமில்லை அரிதான சாத்திரத்தை ஆராய்ந்து பார்த்து
    மூச்சென்ற மூச்சாலே சகலஜனமிறந்தார் மூச்சடங்கி சாகாமல் முயற்சிகேளு
    நாச்சென்ற நடுமூலம் கண்டத்தூன்றி நலியாமல் வுடவீட்டில் கட்டி
    தோச்சென்ற தேசியெங்கும் ஓடாதப்பா சோடகத்தில் சீவகளை இருப்புமாமே

  6. இருப்பான மூலத்தில் கணேசன்பாதம் இருத்தியே வாசியைநீ அதற்குள்மாட்டு
    தடுப்பான பிராணயந்தான் தவறிற்றானால் தம்பித்து வரவழைத்து தளத்தில்சேரு
    குறிப்பான மாத்திரைதான் ஏற ஏறக் குறிகளெல்லாம் குறிப்பாக வடிவம்தோன்றும்
    மதிப்பான வாசியது வழுவிற்றானால் மனிதரெல்லாம் மாடென்ற வார்த்தைதாமே

  7. வார்த்தையால் தாக்கத்தால் ஒன்றுமில்லை வல்லமையால் ஐம்புலனை அடுத்துக்கட்டி
    ஆர்த்தையால் அக்கரத்தை விழிரெண்டில்வைத்து அறிவான மனந்தன்னை
    அதற்குள்மாட்டி
    தேர்த்தையால் தேசியென்ற குதிரைதன்னை சிக்கெனவாய் சிங்கென்று கடிவாளம்பூட்டி
    மூர்த்தையால் மூலத்தில் மறிந்துகட்டி முனையான சுழினைவிட்டு மூட்டில்பாரே

  8. மூட்டியே அதுவுண்ணும் கற்பமுண்ணும் மூதண்டை காயத்தைசுத்தி பண்ணும்
    காட்டியே கனமான மூலிகையுமுண்ணும் கசடகற்றும் கழுகனத்தில்
    கண்ணொளிதான்மீறும்
    ஆட்டியே அண்ணாக்கில் கபத்தைதள்ளி அடுத்தாறு தளத்திலுள்ள ஆமம்நீக்கும்
    வாட்டியே ஐம்புலனை வாளால்வீசு மறவாதே இரவுபகல் வாசிவாட்டே

  9. மாட்டவே மார்க்கமாய் மூலத்தில் நில்லு மறவாதேயொன்றில் நின்றுதேறினாக்கால்
    ஆட்டவே அடிமரத்தைதொத்தியேற ஆச்சர்யம் நுனிமட்டும் ஏறலாகும்
    மூட்டவே மூலமதுபழகினாக்கால் முகிந்தவிடமாறுகடந்தப்பால் தாண்டி
    தூண்டவே துவாதசாந்தத்தில் சொக்கிச் சுருதிமுடிந்திடமறிந்து சேரலாமே

  10. சேரவே சகஸ்திரமா முண்டகத்தின் பூவைச்சேர்ந்தேறிச் சந்திரமண்டலத்தில் புக்கு
    ஆரவே அறிவென்ற மனதால்கொய்து ஆனைமுகன் வல்லபைக்குங்
    குண்டலியாந்தாய்க்கும்
    பாரவே பதத்தில்வைத்து அர்சித்துத்தூபம் பலதூபம்பணிமாரி விவேகத்தாலே
    தூரவே சோமப்பாலுகந்தளித்து தூயநால்மூலத்தில் குதிரைமுனைகட்டே

Thursday, April 14, 2011

பண்பை... பாரம்பரியத்தை மறவாமல் தமிழ் புத்தாண்டைக் கொண்டாடுவோம்...


அன்பும் பண்பும்
நலமும் வளமும்
பொருளும் புகழும்
பெருகிட 'கர' வருடத்தை இனிதே வரவேற்போம்...

அன்பர்கள் அனைவருக்கும் எனது உள்ளம் கனிந்த சித்திரை திருநாள் நல்வாழ்த்துகள்.

Tuesday, March 29, 2011

போகர் ஏழாயிரம் - 11 - 20 பாடல்கள்

  1. காணவே மூலமது அண்டம்போல காரணமாய் திரிகோணமாகி நிற்கும்
    பூணவே மூன்றின்மேல் வளையமாகும் பிரம்பாக இதழதுதான் தானுமாகும்
    நாணவோ நாற்கமலத்து அட்சரத்தைக்கேளு நலமான வயநமசி ரீரீயாகும்
    மூணவே முக்கோணத்துள் ஒளிஓங்காரம் முயற்சியால் அதற்குள்ளே யகாரமாச்சே

  2. அகாரத்தின் மேலாக கணேசன் நிற்பார் ஆதியொருகோணத்தில் உகாரம்நிற்கும்
    உகாரத்தின் வல்லமையால் சக்தி நிற்பாள் ஒடுங்கியதோர் மூலையொன்றில் கதலிப்பூவாய்
    புகாரமாய் முகங்கீடிந குண்டலியாஞ்சக்தி பெண்பாம்புபோல் சுருட்டி சீறிக்கொண்டு
    சுதாரமாய் சுழிமுனையோடு உருவிநிற்பாள் துரியாதீதமென்ற அவத்தைதானே

  3. அவத்தைக்கு இருப்பிடம் மூலமாகும் அழகான கதலிப்பூ எட்டிதழாய் நிற்கும்
    நவத்திற்கு நந்தியநூல் வாயில்நிற்பாள்நற்சிவமாம் சிகாரத்தில் கோடியாகும்
    வவத்தைக்கும் வாய்திறவான் மலனால்மூடும் மைந்தனே எட்டிதழில் எட்டுசக்தி
    பவத்தைக்கு சக்திஎட்டின் பேரேதென்றால் பாங்கான அனிமாவும் லகிமாத்தானே

  4.  தானான லகிமாவும் கிரிமாவோடு தங்குமே சுரக்கத்தான் சத்தில்சத்து
    பூனான பிரதாசத்தி பிரகாமிசத்தி பேரேட்டுத்தேவரையும் தளத்தில் நின்று
    ஏனான இதழாலே மூடிக்கொள்வார் ஏத்தமாம் நந்தியைத்தான் காணாமையால்
    வானான வஸ்துவைநீ பாணம்பண்ணி வங்கென்று வாங்கியே கும்பித்ததே

  5.  ஊதினால் என்வாசத்தில் அகரியாலே உலவுவார் இதழெல்லாம் திறந்துவிட்டு
    போதினால் ஆயிசொன்ன ஏவல் கேளப்பா பூந்துபார் நந்திகண்டால் யோகமாகும்
    வாதினால் பத்தான வருவித்திக்கும் வாசலையே திறவாமல் மூடிக்கொள்வர்
    ஏதினால் இதுக்குல்லே வாசிமாட்டு இடத்தோடி வங்கென்றே உள்ளேவாங்கே

  6. வாங்கியே நந்திதனில் சிங்கென்றுகும்பி வலத்தோடில் சிங்கென்று உள்ளேவாங்கி
    தாங்கியே வங்கென்று இருத்திக்கும்பி தளமான தெளிவாகும் வெளியால்காணும்
    ஓங்கியே மாணிக்க ஒளிபோல்தோன்றும் உத்தமனே மூலத்தின் உண்மைகாணும்
    தேங்கிய வல்லமையாஞ்சத்தி தானும் சிறந்திருந்தால் பச்சைநிறமாகுந்தானே

  7. பச்சைநிற வல்லமையை பணிந்துபோற்று பாங்கான யாருக்கும் பருவம்சொன்னால்
    மொச்சையாய் மூலமது சத்தியானால் மூவுலகும் சஞ்சரித்து திரியலாகும்
    கச்சைநிற காயமுமே கனிந்துமின்னும் கசடகன்று ஆறுதளம் தன்னில்தோன்றும்
    துச்சைநிற வாதமது சொன்னபடிகேட்கும் துரியத்தின் சூட்சமெல்லாம் தோன்றும்பாரே

  8. பாரென்று புரிஅஷ்ட நாவில்சேர்க்கும் பளிச்சென்று மூலத்தில் ஜோதிகாணும்
    காரென்ற தீபவொளி கண்ணோகூசும் கணபதிதான்கண்முன்னே நிர்த்தம்செய்வார்
    ஊரென்ற யோகத்துக்கு உறுதிசொல்வார் உற்பணமாம் வாதத்தின் உண்மைசொல்வார்
    நேரென்ற சதாசிவத்தின் நிலையும் சொல்வார் நீச்சென்று விட்டாக்கால் யோகம்போச்சே

  9.  போச்சென்று விடுக்காதே மூலந்தன்னை போகையிலும் இருக்கையிரு மனத்தில்பூனு
    சேச்சென்ற வீரசத்தம் கேளாய்பக்கம் புரந்திருந்து லட்சியத்தை பூட்டி வாங்கு
    மாச்சென்று வாசியைநீ தவறொட்டாதே மனந்தன்னை மூலத்தில் மருவிச்சேர்க்கும்
    மேச்சென்று கடினம்போல் முன்னேகாணும் விடுகாதே மாச்சலாய் விரைந்துண்ணே

  10. உன்னியே பழகுமட்டும் கடுக்காய்காணும் உட்புகுந்து பார்த்துவந்தால் உறுதிகூடும்
    வன்னியே துலங்குமட்டும் மனதலைக்கும் மாசற்றொளிவு கண்டால் மகிடிநச்சியாகும்
    பின்னியே பிங்கலையில் இசையும்கூடும் பேரானசுழினைதன்னில் கெட்டிசேரும்
    நன்னியே நமன்வெகுன்டு அப்பால்போவான் ஆளெல்லாம் கடிகையுமாய் நாட்டலாமே

Monday, March 28, 2011

ஆதி காலத்திலே தில்லை திருமூலர்
அழகுமலை இராமதேவர்
அனந்த சயன கும்பழனி திருப்பதி கொங்கணவர்
கமலமுனி ஆரூர்
சோதி அரங்க சட்டமுனி கருவை கருவூரார்
சுந்தரானந்தர் கூடல்
சொல்லும் எட்டிக்குடியில் வான்மீகரோடு நற்
றாள் காசி நந்திதேவர்
ப்லாதி அரிச்சங்கரன் கோவில் பாம்பாட்டி
பழனி மலை போகநாதர்
திருப்பரங்குன்றமதில் மச்சமுனி
பதஞ்சலி இராமேசுவரம்
சோதி வைத்தீஸ்வரம் கோவில் தன்சந்திரி பேரையூர்
கோரக்கர் மாயூரங்குதம்பர்
திருவருணையோர் இடைக்காட சமாதியிற்
சேர்ந்தனர் எமைக் காக்கவே.

-இது நெற்கட்டும் செவல் மன்னர் பூலித்தேவர் காலத்தில் உள்ள ஓலைச்சுவடியின் சான்று.

மதுரை-அழகர் கோவிலின் முன்பாக 18-ம் படி கருப்பண்ணசாமியாக உள்ள 18 படிகளும், 18 சித்தர்கள் ஆவார்கள். ஆடி 18 அன்று சிறப்பு பூசை நடைபெறுகிறது.

கரூர் அருகில் உள்ள அய்யர் மலையில் உள்ள சுனையில் பஞ்சமாசித்தர்களான 1. பஞ்சமுக சுரேஸ்வர சித்தர், 2. சதுர்முக சுரேஸ்வர சித்தர், 3. திரிபலாதர சுரேஸ்வர சித்தர் 4. ஸ்கந்த பதுமபலாதி சித்தர் 5. திரி மதுர நீற்று முனீஸ்வர சித்தர் வசிக்கிறார்கள். இவர்களை வழிபட சகல பாபங்களும் தீரும்.

  1. திருமூலர் - சிதம்பரம்.
  2. போகர் - பழனி என்கிற ஆவினன்குடி.
  3. கருவூர்சித்தர் – கருவூர், திருகாளத்தி, ஆணிலையப்பர் கோவில்.
  4. புலிப்பாணி - பழனி அருகில் வைகாவூர்.
  5. கொங்கணர் - திருப்பதி, திருமலை
  6. மச்சமுனி - திருப்பரங்குன்றம், திருவானைக்கால்
  7. வல்லப சித்தர் என்னும் சுந்தரானந்தர் - மதுரை.
  8. சட்டைமுனி சித்தர் – திருவரங்கம்.
  9. அகத்தியர் – திருவனந்தபுரம், கும்பகோணத்திலுள்ள கும்பேஸ்வரர் கோவில்.
  10. தேரையர் - தோரணமலை (மலையாள நாடு)
  11. கோரக்கர் – பேரூர்.
  12. பாம்பாட்டி சித்தர் - மருதமலை, துவாரகை, விருத்தாசலம்.
  13. சிவவாக்கியர் - கும்பகோணம்.
  14. உரோமரிசி - திருக்கயிலை
  15. காகபுசுண்டர் - திருச்சி, உறையூர்.
  16. இடைக்காட்டுச் சித்தர் - திருவண்ணாமலை
  17. குதம்ப்பைச் சித்தர் - மயிலாடுதுறை
  18. பதஞ்சலி சித்தர் - சிதம்பரம், அழகர் கோவில், இராமேஸ்வரம்.
  19. புலத்தியர் - பாபநாசம், திருஆலவுடையார் கோவில்.
  20. திருமூலம் நோக்க சித்தர் - மேலை சிதம்பரம்.
  21. அழகண்ண சித்தர் - நாகப்பட்டினம்.
  22. நாரதர் - திருவிடைமருதூர், கருவை நல்லூர்.
  23. இராமதேவ சித்தர் - அழகர் மலை
  24. மார்க்கண்டேயர் - கருவை நல்லூர்.
  25. புண்ணாக்கீசர் - நண்ணாசேர்.
  26. காசிபர் - ருத்ரகிரி
  27. வரதர் - தென்மலை
  28. கன்னிச் சித்தர் - பெருங்காவூர்.
  29. தன்வந்தரி – வைத்தீஸ்வரன் கோவில்
  30. நந்தி சித்தர் - காசி, திருவாவடுதுறை, காளங்கி.
  31. காடுவெளி சித்தர் - திருக்காஞ்சிபுரம்.
  32. விசுவாமித்திரர் - காசி, திருவாவடுதுறை, காளங்கி.
  33. கௌதமர் - திருவருணை, திருவிடைமருதூர்.
  34. கமல முனி - ஆரூர்
  35. சந்திரானந்தர் - திருவாஞ்சியம்.
  36. சுந்தரர் - வாரிட்சம், திருவாரூர்.
  37. காளங்கி நாதர் - திருக்கடவூர், திருப்பணந்தாள்.
  38. வான்மீகி - எட்டிக்குடி, திருவையாறு.
  39. அகப்பேய் சித்தர் - திருவையாறு, எட்டிக்குடி.
  40. பட்டினத்தார் - திருவொற்றியூர்.
  41. வள்ளலார் - வடலூர்.
  42. சென்னிமலை சித்தர் - கேரளத்தில் உள்ள நாங்குனாசேரி.
  43. சதாசிவப் பிரம்மேந்திரர் - நெரூர்.
  44. ராமகிருஷ்ணர், சாரதாதேவியார் - பேலூர் மடம்
  45. ராகவேந்திரர் - மந்திராலயம்.
  46. ரமண மகரிஷி - திருவண்ணாமலை, மாத்ருபூதேஸ்வரர் ஆலயம்.
  47. குமரகுருபரர் - காசி.
  48. நடன கோபால நாயகி சுவாமிகள் - காதக்கிணறு.
  49. ஞானானந்த சுவாமிகள் - அனைத்து தபோவனங்கள்.
  50. ஷீரடி சாயிபாபா - ஷீரடி.
  51. சேக்கிழார் பெருமான் - மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி சன்னதிக்கு பின்புறம்.
  52. ராமானுஜர் - ஸ்ரீரங்கம்.
  53. பரமஹம்ச யோகானந்தர் - கலிபோர்னியா.
  54. யுக்தேஸ்வரர் - பூரி.
  55. ஜட்ஜ் சுவாமிகள் - புதுக்கோட்டை
  56. ஆதி பராசக்தி திருகோவிலில் 21 சித்தர்களின் ஜீவ சமாதிகள் உள்ளன.
  57. கண்ணப்ப நாயனார் - காளஹஸ்தி.
  58. சிவப்பிரகாச அடிகள் - திருப்பழையாறை வடதளி.
  59. குரு பாபா ராம்தேவ் - போகரனிலிருந்து 13 கி.மி.
  60. ராணி சென்னம்மாள் - பிதானூர், கொப்புலிமடம்.
  61. பூஜ்ய ஸ்ரீ சித்த நரஹரி குருஜி - மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் அருகில் சித்தாசிரமம்.
  62. குழந்தையானந்த சுவாமிகள் - மதுரை காளவாசல்.
  63. முத்து வடுகநாதர் - சிங்கம் புணரி.
  64. இராமதேவர் - நாகப்பட்டிணம்.
  65. அருணகிரிநாதர் - திருவண்ணாமலை.
  66. பாடக்சேரி தவத்திரு இராமலிங்க சுவாமிகள் – தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோவில்.
  67. மௌன சாமி சித்தர் - தென்காசியிலிருந்து செங்கோட்டை செல்லும் வழியில் உள்ளது.
  68. சிறுதொண்டை நாயனார் - திருச்செட்டாங்குடி.
  69. ஒடுக்கத்தூர் சுவாமிகள் - பெங்களூரில் அல்சூர் ஏரிக்கரையில் உள்ளது.
  70. வல்லநாட்டு மகாசித்தர் - வல்லநாடு.
  71. சுப்பிரமணிய சித்தர் - ரெட்டியப்பட்டி.
  72. சிவஞான பாலசித்தர் - மயிலாடுதுறை முருகன் சந்நிதி.
  73. கம்பர் - நாட்டரசன் கோட்டை.
  74. நாகலிங்க சுவாமிகள் - புதுவை அம்பலத்தாடையார் மடம்.
  75. அழகர் சுவாமிகள் - தென்னம்பாக்கம்.
  76. சிவஞான பாலைய சுவாமிகள் - புதுவைக்கு வடக்கே 6 மைல் தொலைவில் உள்ளது.
  77. சித்தானந்த சுவாமிகள் - புதுவைக்கு அருகிலுள்ள கருவடிக்குப்பம்.
  78. சக்திவேல் பரமானந்த குரு - புதுவையிலுள்ள முதலியார் பேட்டை.
  79. ஸ்ரீராம் பரதேசி சுவாமிகள் - வில்லியனூர் செல்லும் பாதையில் வலப்புறம் அமைந்து உள்ளது.
  80. அக்கா சுவாமிகள் - புதுவையில் உள்ள குதிரைக்களம் அருகே.
  81. மகான் படே சுவாமிகள் - சின்னபாபு சமுத்திரம்.
  82. கம்பளி ஞானதேசிக சுவாமிகள் - புதுவை அருகில் ருத்திர பூமிக்கு சமீபமாக அமைந்துள்ளது.
  83. பகவந்த சுவாமிகள் - புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில்.
  84. கதிர்வேல் சுவாமிகள் – ஸ்ரீலங்கா, புதுவை அருகில் சித்தன் குடியிலும் சமாதி உண்டு.
  85. சாந்த நந்த சுவாமிகள் - ஸ்ரீ சாரதா சிவகங்கை பீடத்திற்கு அருகில் உள்ளது.
  86. தயானந்த சுவாமிகள் - புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில்.
  87. தஷிணாமூர்த்தி சுவாமிகள் - பாண்டிசேரியடுத்த பள்ளித் தென்னல்.
  88. ஞானகுரு குள்ளச்சாமிகள் - புதுவை.
  89. வேதாந்த சுவாமிகள் - புதுவை, திருமுத்துகுமார் சுவாமிகள் தோட்டத்தில் உள்ளது.
  90. லஷ்மண சுவாமிகள் - புதுவையிலுள்ள புதுப்பட்டி.
  91. மண்ணுருட்டி சுவாமிகள் - புதுவையிலுள்ள சுதேசி காட்டன் மில் எதிரில்.
  92. சுப்பிரமணிய அபிநய சச்சிதானந்த பாரதி சுவாமிகள் - பாண்டிசேரியிலுள்ள எல்லப் பிள்ளை.
  93. யோகி ராம் சுரத்குமார் (விசிறி சுவாமிகள்) - திருவண்ணாமலை.
  94. கோட்டூர் சுவாமிகள் - சாத்தூர் அருகிலுள்ள கோட்டூர்.
  95. தகப்பன் மகன் சமாதி - கிரிவலம் வந்த நல்லூர் அருகே பனையூர்.
  96. நாராயண சாமி அய்யா சமாதி - நாகர்கோவில்.
  97. போதேந்திர சுவாமிகள் - தஞ்சை மாவட்டத்திலுள்ள மருதநல்லூர்.
  98. அவதூர ரோக நிவர்தீஸ்வரர் சுவாமிகள் - சென்னை பூந்தமல்லி.
  99. வன்மீக நாதர் - எட்டிக்குடி.
  100. தம்பிக்கலையான் சித்தர் - சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோவிலில் உள்ள 108 சிவலிங்கங்களில் இரண்டாவதாக உள்ள லிங்கத்தில் ஐக்கியம் ஆகியுள்ளார்.
  101. மெய்வரத் தம்பிரான் சுவாமிகள் - திருச்சி, ஜெயங்கொண்ட சோழபுரத்திலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது.
  102. குகை நாச்சியார் மகான் - திருவண்ணாமலை.
  103. வாலைகுருசாமி - சிதம்பரத்திலுள்ள கொம்மடிக் கோட்டை.
  104. பாம்பன் சுவாமிகள் - திருவான்மியூர்.
  105. குமாரசாமி சித்தர் சுவாமிகள் - கோயமுத்தூரிலுள்ள பூராண்டான் பாளையம்.
  106. பெரியாழ்வார் சுவாமிகள் - அழகர் கோவில் (மதுரை)
  107. மாயம்மா ஜீவசமாதி - கன்னியாகுமரி.
  108. பரமாச்சாரியார் ஜீவசமாதி - காஞ்சிபுரம்.

போகர் ஏழாயிரம் - 1 - 10 பாடல்கள்

  1. ஆனந்தமாய் நிறைந்த ஆதிபாதம் அண்டபரி பூரணமாம் ஐயர் பாதம்
    வானந்தமாகி நின்ற கணேசன் பாதம் மருவியதோர் மூலத்தின் நந்தி பாதம்
    தானந்தமாகியதோர் காளாங்கி பாதம் கனவருடவியாக்கிரமர் பதஞ்சலியின் பாதம்
    போனந்தமாகியதோர் ரிஷிகள் பாதம் போற்றி ஏழாயிரம் நூல் பகலுவேனே
  2. தானான தாமிரபரணி ஏழு காதம் தாக்காண காவேரி எழுபது காதம்
    வேனான கங்காவும் எழுநூறு காதம் வேகமுடன் சென்றுமல்லோ குளிகைகொண்டேன்
    கானான கடலேழும் சுற்றிவந்து காணாத காட்சியெல்லாம் கண்ணிற் கண்டு
    பாணான பராபரியை மனதிலெண்ணி பாடினேன் சப்தகாண்டம் பண்பாய்த்தானே
  3.  பண்பான வைத்தியமும் வாதமார்க்கம் பரிதான ஜெகஜால குளிகைமார்க்கம்
    நண்பான சித்தர்களின் மறைவுமார்க்கம் நலமான ராஜாக்கள் இருந்தமார்க்கம்
    திண்பான தேவர்தாம் கடந்தமார்க்கம் திறமான மனோவேகம் செல்லும்மார்க்கம்
    தண்பான சாஸ்திரங்கள் தொகுப்புமார்க்கம் தயவான மூலிகையுட ரகசியங்காணே
  4.  காணவே பாண்டவாளிருந்த மார்க்கம் கதிர்மதியின் கிரிகைகளிலிருக்கும் மார்க்கம்
    பூணவே பிரமாலய தேவாலயங்கள் புகழான பாசமான மலைகள் மார்க்கம்
    தோணவே சரக்குகளின் வைப்பு மார்க்கம் துறையான ஆதிமலைகளிருக்கு மார்க்கம்
    ஈணவே மிருகங்கள் மகத்துவமார்க்கம் எழிலான பட்ஷியுட மார்க்கம்பாரே
  5.  பார்க்கவே மனிதரிடம் பேதாபேதம் பாங்கான உரைகோடி சொந்தங்கோடி
    ஏர்க்ககே அதிசயங்கள் எடுத்துக்கூற ஆதிசேஷனிலும் ஆகா
    சேர்க்கவே உலகத்தின் மகிமைகோடி சிறப்பான அதிசயங்கள் உள்ளதெல்லாம்
    ஆர்க்கவே சித்தர்களை வணங்கியானும் அன்பாக போகரிஷி அறைந்திட்டேனே
  6.  அறைந்திட்டேன் ஏழுலட்சம் கிரந்தந்தன்னைஅன்பாக அதிசயங்களெல்லாம் பார்த்து
    குறைந்திட்டேன் போகரேழாயிரமாக கூறினேன் லோகத்து மாந்தர்க்காக
    வறைந்திட்டேன் நாலுயுக அதிசாயங்கள் யாவும் வாகாக பாடிவைத்தேன் சத்தகாண்டம்
    வுறைந்திட்டேன் சீனதேசம் யானும்சென்று பாடினேன் போகரிஷி புகலுவேனே
  7. புகலுவேன் வாதியென்ற பேர்களுக்கு போற்றியே மெய்ஞானம் வரவேண்டும்
    நிகலுகின்ற ஆதாரம் அறியவேண்டும் நீக்கறிய காலத்தை நிறுத்தவேண்டும்
    புகலுகின்ற பராபரியை பூசிக்கவேண்டும் பானமென்றால் தூசிக்காய் பருவம்வேண்டும்
    மகலுகின்ற குருமுறையும் கைமுறையும் வேண்டும் மறுகாட்டாவிதெல்லாம் வாதம்போச்சே
  8.  போகாமல் வாதத்தை நிறுத்தவென்றால் போக்கோடே சவர்க்காரக் குருவைப்பண்ணு
    வாகாக முப்பைநன்றாய் கட்டியிறு மருவியதன் பூரத்தையுப்பு பண்ணு
    தாகாறும் தாளகத்தை நீறுபண்ணு சமர்த்துடனே வங்கத்தை சுண்ணம்பண்ணு
    வேகாத துரிசியைத்தான் குருவாய்ப்பண்ணு விளங்கியதோர் வாதமெல்லாம் கைக்குள்ளாச்சே
  9.  கரிமுகன் பதம் போற்றி கடவுள் பதம் போற்றி கடாட்சித்து எனையீன்ற ஆயிபதம் போற்றி
    அரிஅயன் பதம் போற்றி வாணி பதம் போற்றி அருள்தந்த லட்சுமிதான் ஆயிபதம்போற்றி
    வரியமாம் பாட்டனென்ற மூவர்பதம் போற்றி துணையான காளாங்கி அய்யர்பதம்போற்றி
    நிரிவிகற்ப சமாதியுற்ற ரிஷிகள்பதம் போற்றி நிறைந்துநின்ற சரளமே காப்புதானே
  10.  தானான ஏழுலட்சம் சிவன்தான் சொன்ன சாஸ்திரத்தின் கருவெல்லாம் திரிக்கப்பண்ணி
    கோனான குருநூலாம் ஏழுகாண்டம் கொட்டினேன் வாதமென்ற முறைதடன்னை
    பானான பாட்டுரைதான் கருக்கள் கேட்டு பயின்றெடுத்த ஆயிசொன்ன பண்புகேட்டு
    தேனான காளாங்கி ஐயரையுங் கேட்டு செப்பினேன் சத்தகாண்டம் திறமாய்த்தானே

Sunday, March 27, 2011

  1. திருமூலர் - சிதம்பரம்
  2. இராமதேவர் - அழகர்மலை
  3. அகஸ்தியர் - திருவனந்தபுரம்
  4. கொங்கணர் - திருப்பதி
  5. கமலமுனி - திருவாரூர்
  6. சட்டமுனி - திருவரங்கம்
  7. கரூவூரார் - கரூர்
  8. சுந்தரனார் - மதுரை
  9. வான்மீகர் - எட்டிக்குடி
  10. நந்திதேவர் - காசி
  11. பாம்பாட்டி சித்தர் - சங்கரன்கோவில்
  12. போகர் - பழனி
  13. மச்சமுனி - திருப்பரங்குன்றம்
  14. பதஞ்சலி - இராமேஸ்வரம்
  15. தன்வந்திரி - வைதீஸ்வரன்கோவில்
  16. கோரக்கர் - பேரூர்
  17. குதம்பை சித்தர் - மாயவரம்
  18. இடைக்காடர் - திருவண்ணாமலை

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்சிதம்பரம்
இறைவன் பெயர்கனகசபை - சபாநாயகர், திருமூலட்டானம் - திருமூலநாதர்
இறைவி பெயர்கனகசபை - சிவகாமி, திருமூலட்டானம் - உமையம்மை
பதிகம்திருநாவுக்கரசர் - 8,
திருஞானசம்பந்தர் - 2
சுந்தரர் - 1
எப்படிப் போவது சென்னையில் இருந்து ரயில் மற்றும் சாலை மார்க்கமாக சிதம்பரம் சென்று அடையலாம். சென்னையில் இருந்து சுமார் 240 Km தொலைவில் சிதம்பரம் இருக்கிறது. காவிரியின் வடகரை சிவஸ்தலங்களை தரிசிக்க சிதம்பரத்தை ஒரு நுழைவாயில் என்று கூட சொல்லலாம்.
ஆலய முகவரிஅருள்மிகு நடராஜர் திருக்கோவில்
சிதம்பரம் அஞ்சல்
கடலூர் மாவட்டம்
PIN - 608001

இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் திறந்திருக்கும்.


  • பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத்தலம்
  • தரிசிக்க முக்தி தரும் தலம்
  • பஞ்ச சபைகளில் பொற்சபையாக விளங்கும் தலம்
  • ஆதாரத் தலங்களில் இருதய தலமாக விளங்கும் தலம்
  • அம்பாள் இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியாசக்தியாக்க் காட்சி தரும் தலம்
  • நடு இரவுக்குப் பின் அனைத்து லிங்கங்களின் சக்தியும் வந்து சேரும் திருமூலட்டானத் தலம்
  • சைவர்களுக்கு கோவில் என்று அறியப்படும் தலம்

இத்தகைய பெருமைகளைப் பெற்றிருக்கும் தலம் தான் சிதம்பரம். இந்த சிதம்பரம் கோவில் 40 ஏக்கர் நிலப்பரப்பில் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. கருங்கற்களால கட்டப்பட்ட மதிற்சுவர்களுடனும், விண்ணை முட்டும் நான்கு இராஜ கோபுரங்களுடனும் நன்கு அமைந்திருக்கிறது. கோவில் கோபுரத்து மாடங்களில் எண்ணற்ற முனிவர்கள், தேவர்கள் சிற்பங்கள் காணப்படுகின்றன. கிழக்கு மேற்கு கோபுரங்களில் 108 நடன பாவங்களையும் அறிவிக்கும் சிறபங்கள் அழகிய முறையில் அமைக்கப்பட்டுள்ளன. சமயக்குரவர் என்று போற்றப்படும் அப்பர், சம்பந்தர், சுந்தரர் மற்றும் மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும் ஒவ்வொரு வாயில் வழியாக தில்லை சிதம்பரம் கோவிலுக்குள் எழுந்தருளினர் என்று வரலாறு கூறுகிறது. மேற்குக் கோபுர வாயில் வழியாக திருநாவுக்கரசரும், தெற்குக் கோபுர வாயில் வழியாக திருஞானசம்பந்தரும், வடக்கு கோபுர வாயில் வழியாக சுந்தரரும், கிழக்குக் கோபுர வாயில் வழியாக மாணிக்கவாசகரும் வந்து தில்லைச் சிற்றம்பலத்திலுள்ள சிவபெருமானை வழிபட்டுள்ளனர்.

தில்லை சிதம்பரத்தில் திருமூலட்டானத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவன் திருப்பெயர் மூலட்டானேஸ்வரர் (திருமூலநாதர்). அர்த்தசாம வழிபாடு முடிந்தவுடன் எல்லக் கோவில்களிலுமுள்ள சிவகலைகள் அனைத்தும் இந்த மூலத்தான லிங்கத்தில் ஒடுங்குவதால் இந்த பெயர் அமைந்தது. திருமூலட்டானத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவி திருப்பெயர் உமையம்மை.

நடராஜப் பெருமானுக்கு உள்ள திருச்சபைகள் ஐந்தில் சிதம்பரம் தலம் கனகசபையாகும். மற்றவை 1) திருவாலங்காடு - இரத்தினசபை, 2) மதுரை - வெள்ளிசபை, 3) திருநெல்வேலி - தாமிரசபை, 4) திருக்குற்றாலம் - சித்திரசபை.

இவையன்றி தில்லை சிதம்பரத்தில் உள்ள நடராஜப் பெருமானுக்கு இக்கோவிலேயே ஐந்து சபைகள் இருக்கின்றன. அவை முறையே சிற்சபை (சிற்றம்பலம்), 2) கனகசபை, 3) இராசசபை, 4) தேவசபை, 5) நிருத்தசபை ஆகியவையாகும். இவற்றுள்

  1. சிற்சபை (சிற்றம்பலம்) நடராஜப் பெருமான் திருநடனம் புரிந்தருளும் இடமாகும். முதலாம் ஆதித்த சோழனுடைய மகன் முதல் பராந்தக சோழன் இச்சிற்றம்பலத்திற்கு பொன் வேய்ந்தான் என்று திருவாலங்காட்டுச் செப்பேடுகளும் "லெய்டன்" நகரப் பெரிய செப்பேடுகளும் கூறுகின்றன.
  2. கனகசபை (பொன்னம்பலம்) சிற்றம்பலத்திற்கு முன் அமைந்துள்ளது. இங்கு ஸ்படிக லிங்கத்திற்கு நாள்தோறும் ஆறு கால பூஜை நடைபெறுகிறது. இப்பொன்னம்பலத்தின் முகட்டை, முதலாம் ஆதித்த சோழன், கொங்கு நாட்டிலிருந்து கொண்டுவந்து உயர்ந்த மாற்றுடைய பொன்னால் வேய்ந்தான் என்று தெய்வச் சேக்கிழார் "இடங்கழி நாயனார்" வரலாற்றில் கூறுகின்றார். தில்லைக் கோயில் கல்வெட்டுப்பாடலொன்று சிறந்த சிவபக்தனும், படைத்தலைவனுமான மணவில் கூத்தனான காளிங்கராயன் என்பவன் இப்பொன்னம்பலத்தைப் பொன்னால் வேய்ந்தான் என்று கூறுகின்றது.
  3. இராசசபை என்பது ஆயிரங்கால் மண்டபம். ஆண்டுதோறும் ஆனி, மார்கழி மாதங்களில் நடைபெறும் ஒன்பதாம் நாள் திருவிழாக்களில் நடராஜப் பெருமான் இரவில் இம்மண்டபத்தில் எழுந்தருளி மறுநாள் காலை பக்தர்களுக்கு தரிசனம் தருவார்.
  4. தேவசபை பேரம்பலம் என்று அழைக்கப்படுகிறது. இதன் விமானம் செம்பினால் வேயப்பட்டுள்ளது.
  5. நிருத்தசபை நடராஜப் பெருமானின் கொடிமரத்திற்குத் தென்புறம் மிகவும் அற்புதமான வேலைப்பாடுகளுடன் அமைந்துள்ளது. ஊர்த்துவ பெருமானின் திருமேனி இங்கு உள்ளது.

மூன்றாம் பிரகாரத்தில் சிவகங்கை திருக்குளத்திற்கு மேற்கே அம்பிகை சிவகாமசுந்தரியின் சந்நிதி ஒரு தனிக்கோவிலாக பிரகாரத்துடன் அமைந்து விளங்குகிறது. கோவிலின் வடமேற்குத் திசையில் அம்பிகை சிவகாமசுந்தரி கோவிலை ஒட்டியும், வடக்கு கோபுரத்தை ஒட்டியும் முருகன் கோவில் அமைந்து விளங்குகிறது. ஆறுமுகப் பெருமான் வள்ளி தெய்வயானை இருபக்கமும் நிற்க மயிலின் மீது எழுந்தருளி காட்சி தருகிறார். முருகனின் திரு உருவம் ஒரே கல்லினால் அமைந்ததாகும்.

சிதம்பர ரகசியம்: சிதம்பர ரகசியம் என்பது சிதம்பரத்தில் மிக முக்கியமானதாகும். சிற்சபையில் சபாநாயகரின் வலது பக்கத்தில் உள்ளது ஒரு சிறு வாயில். இதில் உள்ள திரை அகற்றப்படும்போது கற்பூர ஆரத்தி காட்டப்பெறும். இதனுள்ளே திருவுருவம் ஏதும் இல்லை. தங்கத்தாலான வில்வ தள மாலை ஒன்று சுவரில் தொங்கவிடப்பட்டுக் காட்சி அளிக்கும். மூர்த்தி ஏதும் இல்லாமலேயே வில்வதள மாலை தொங்கும். இதன் ரகசியம், இறைவன் இங்கு ஆகாய உருவில் இருக்கின்றார் என்பதை உணர்த்துவதேயாகும். அகண்ட பெருவெளியில் நிறைந்திருக்கும் இறைவனை வெறும் வெளியையே காட்டி இங்கு வழிபட வகை செய்யப்பட்டுள்ளது. இதுவேதான் சிதம்பர ரகசியம் என அனைவராலும் போற்றி வழிபாடு செய்யப்படுகின்றது. மூர்த்தி, தலம், தீர்த்தம் இவற்றுக்கு ஒரு மிகச் சிறந்த தலம் சிதம்பரம் என்ற தில்லையாகும்.

திருவெண்காடு தலமே ஆதிசிதம்பரம் என்றும்; சிதம்பரம் சிற்சபையில் காணும் நடராஜப் பெருமானின் திருமேனி ராஜராஜன் காலத்தில்தான் தோற்றுவிக்கப்பட்டது என்றும், அதன் பின்னரே தமிழ்நாட்டில் அனைத்துச் சிவாலயங்களிலும் நடராஜர் திருமேனி அமைக்கப்பட்டு வழிபாட்டில் சிறப்புடன் விளங்குவதாகவும் சிலர் கூறுவர். சிதம்பரத்தில் நடராஜப் பெருமானுக்கு மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் நிகழும் ஆருத்ரா தரிசனமும், ஆனிமாதம் உத்திர நட்சத்திரத்தில் நடக்கும் விழாவும் இங்கு நடக்கும் இரு சிறப்பு வாய்ந்த பெரும் விழாக்களாகும்.

சைவ, வைணவ சமய ஒற்றுமைக்கு சிதம்பரம் கோவில் ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கிறது. 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றான திருசித்திரக்கூடம் என்று அழைக்கப்படும் கோவிந்தராஜப் பெருமாள் கோவில் தில்லை சிதம்பரம் கோவிலின் உள்ளே அமைந்திருக்கிறது. நடராஜப் பெருமானின் சந்நிதிக்கு நேர் எதிரே நின்றுகொண்டு நடராஜரை தரிசனம் செய்தபிறகு இடதுபுறம் திரும்பி நின்றால் கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியைக் காணலாம். இரண்டு சந்நிதிகளும் அருகருகே அமைந்திருப்பது தில்லை கோவிலின் சிறப்பாகும்.

Content Source : www.shivatemples.com

பொதுவா எல்லாருக்கும் இருக்கிற கேள்வி இது. மலை அப்படினாலே அமைதியா, மத்த சாதாரண மனுஷங்களோட தொந்தரவு இல்லாம, அருவிகள், சுனைகள், மூலிகைகள் இருக்கிற ஒரு இயற்கையான இடம். இதைத்தவிர நம்ம புராணங்கள்லேயும் மலைகளை பத்தி பல விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கு.


இதைப்பத்தி பெரிய குரு ஒருத்தர் சொன்னத இணையத்துல படிச்சேங்க...அதை அப்படியே உங்களுக்கு தரேன்.

  • நமது புராணங்களும், வேதங்களும் கைலாய மலையை சிவனின் வாஸ்த தலமாக சொல்கிறது.
  • அதே போன்றே திருமாலின் அம்சமாக திருமலை கருதப்படுகிறது.
  • திருவண்ணாமலை கூட அல்ல அல்ல அந்த ஊரில் உள்ள ஒவ்வொரு துளி மண் கூட சிவலிங்கமாக மதிக்கப்படுகிறது.
  • ஒரு வைணவ பெரியவர் கால்களால் மிதிக்காமல் முழங்காலிட்டே திருமலை ஏறியுள்ளார்.
  • காரைக்கால் அம்மையாரும் தலையால் ஊர்ந்தே கைலாச மலையை அடைந்துள்ளார்.
  • திருநாவுக்கரசரும் திருவண்ணாமலையை கால்களால் தீண்டுவது பெரும் பாவம் என அரகண்டநல்லூர் அதுல்யநாதேஸ்வர் ஆலயத்திலிருந்தே அண்ணாமலையை தரிசித்துள்ளார்.
  • அன்னை ஆதிபராசக்திக்கு விந்தியா சல நிவாசினி என்று ஒரு பெயர் உள்ளது. அதன் பொருள் என்னவென்றால் விந்திய மலையில் வாசம் புரிபவள் என்பதாகும்.
  • உச்சி பிள்ளையாரும், ஐயப்பனும் மலையிலேயே இருக்கிறார்கள்.
  • குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என வழிபடப்படுகிறது.
  • பராம்பரியமான சந்நியாசகளின் ஒரு பிரிவினருக்கு கிரி என்ற மலை பெயரே சந்நியாச நாமமாக கொடுக்கப்படுகிறது.
  • இவை எல்லாம் இந்து பராம்பயத்தில் மலைக்கு கொடுக்கும் முக்கியத்துவமாகும்.
  • ஏசுநாதர் கூட கொல்கொதா மலையில் தான் முதல் பிரசங்கத்தை துவங்கினார்.
  • கல்வாரி மலையில் தான் சிலுவையில் அறையப்பட்டார்.
  • ஆகவே மலைகளுக்கும் ஆன்மீக உணர்விற்கும் மிக நெருக்கமான உறவு உலகம் முழுவதும் இருந்து வருகிறது.
  • அதற்கு காரணம் என்ன? மலைகள் மனிதனால் அதிகமாக சஞ்சாரம் செய்யாத பகுதி ஆகும்.
  • மனித மனதிலிருந்து உற்பத்தியாகும் பல வகையான எண்ண அலைகள் மலை பகுதிகளில் குறைவாகவே இருக்கும்.
  • இதனால் தவம் புரிவதற்கும், தியானம் செய்வதற்கும் மலைகள் பேருதவி புரிகின்றன. இதனாலேயே கடவுள் அம்சமாக மலை கருதப்படுகிறது.
Source : http://ujiladevi.blogspot.com/2011/02/blog-post_04.html

    Thursday, March 24, 2011


    கொஞ்ச நாளாவே இணைய வலைப்பூக்கள்ள சித்தர்களைப் பற்றி படிக்க ஆரம்பிச்சேன். சத்தியமா இதுக்கு எந்த காரணுமும் இல்ல. அனுஷ்காவையும் த்ரிஷாவையும் வழிய வழிய பாத்துட்டு சித்தர்களை பத்தி படிக்கறது என்னவோ கொஞ்சம் கஷ்டமான விஷயம்தான். ஆனா எனக்கென்னவோ சித்தர்கள் டாபிக் interesting ஆகவே இருந்திச்சு.

    ஒரு வாரமா ஆபீஸ்ல வேலைக்கு நடுவுல (Please note this point)  நல்லா அவங்களைப் பத்தி research பண்ண ஆரம்பிச்சேன்.

    அவங்களுடைய பிறப்பு, வளர்ந்த முறைகள், வளர்ந்த காலக்கட்டங்கள், உணவு முறைகள்,  மருத்துவ முறைகள், சமூக கட்டமைப்புகள், இப்படி எல்லாத்தையுமே....ஆனா என்னால எல்லாத்தையும் gather பண்ண முடியல. இதுக்கான முக்கிய காரணம் அந்த காலத்து தமிழ். அவங்க சொன்னதும் அவங்களப் பத்தி சொன்னவங்களும் செய்யுள் நடையா தான் சொல்லிருக்காங்க. நம்ம (செய்யுள்)தமிழ்ல கொஞ்சம் வீக். So, நா கிளீன் போல்ட்.

    ஆனாலும் பலப்பல இணையங்கள்ள நல்லா விரிவாஅவங்களப் பத்தி சொல்லிருக்காங்க. அந்த மாதிரியான இணையத்தளங்கள், வலைப்பூக்கள் எனக்கு ரொம்ப உதவியா இருந்திச்சு.

    சித்தர்களைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளோ ஆவணங்களோ கல்வெட்டுகளோ எதுவுமே காணக்கூடியதாக இல்லை. (or எனக்கு தெரியல...) இந்நிலையில் சித்தர்கள் எத்தனைபேர்கள் என்பதில் பல்வேறு கருத்துகள் இருக்குதுங்க. திரேதாயுகத்தில் ஆயிரம்பேர், துவாபார யுகத்தில் ஐந்நூறு பேர், கலியுகத்தில் மூவாயிரம் பேர் 59 சித்தர்கள் வாழ்ந்ததாகச் சொல்லப்படுது.


    சரி, சித்தர்கள் னா யாருங்க?

    பொதுவா எல்லாருக்கும் தெரிஞ்ச மாதிரி, இரும்பை தங்கமா மாத்திறவங்க...தண்ணி மேல நடகறவங்க, வானத்துல பறக்கறவங்க...இந்த மாதரியான சித்து வேலைகளை பண்றவங்களா...? சத்தியமா இல்லை. நானும் ரொம்ப நாளா அப்படிதான் நினைச்சுட்டு இருந்தேன்.

    சித்தர்கள்னா சித்தி பெற்றவங்கனு பொருள் கொள்ளலாம். அதாவது சிவத்தை நினைத்து, தியானித்து அவரை அகக்கண்ணால் தரிசித்து தன்னுள் இருக்கும் ஆத்ம சக்தியை எழுப்பி இந்த உலகில் மற்ற சாதரணமான மக்கள் செய்ய முடியாத காரியங்களை செய்யறது சித்தர்களுடைய வேலையாகும். இதைத்தான் சித்து விளையாட்டுகள்னு நாம சொல்றோம்.


    சித்தத்தை அடக்கியவங்க மட்டும் சித்தர்கள் இல்லைங்க. இந்த உலக இயக்கத்தை, பிரபஞ்ச இரகசியத்தை, இறை ஆற்றலை இப்படி அனைத்தையும் கண்டு தெரிஞ்சவங்களே சித்தர்கள். அதாவது இயற்கையோடு  இயற்கையாக வாழ்ந்து இயற்கையோட இரகசியத்தை கண்டு தெரிஞ்சவங்களே சித்தர்கள்.

    சித்தர்களின் இருப்பிடம்

    சித்தர்கள் தங்கள் இருப்பிடமாக மக்கள் வாழ்விடங்களைத் தேர்வு செய்யாமல், மலைகளிலேயே இருந்திருக்காங்கன்னு  தெரியுது. மலை என்பது தனிமை, அமைதி, மூலிகை போன்றவற்றின் இருப்பிடம் என்பதால் அவ்விடங்கள் சித்தர்களுக்குச் சிறந்ததாக இருந்திச்சு.